பெற்றோர் கண்டித்ததால் 2 மாணவிகள் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள கரிகிரி பகுதியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகின்றார். இவரது வீட்டிற்கு பாகாயத்தை சேர்ந்த உறவினர் மகளான 12-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி வந்துள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து அடிக்கடி செல்போன் உபயோகப்படுத்தி வருவதாக பெற்றோர்கள் கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாணவிகள் இருவரும் சேர்ந்து வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர். ஆனால் நீண்ட நேரமாகியும் மாணவிகள் வீட்டிற்கு திரும்பாததால் பெற்றோர்கள் அவர்களை தேடி வந்துள்ளனர். இதுகுறித்து பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின்படி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.