Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த பெற்றோர்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புருஷோத்தம குப்பம் காட்டுக்கொல்லை பகுதியில் சிவலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இவருக்கு ஆனந்தன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னை தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தன் ஆன்லைன் மூலமாக மொபைல் போனில் ரம்மி விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். இவற்றில் இருந்து அதிக அளவில் பணம் வந்த காரணத்தினால் தொடர்ந்து அவர் விளையாடி வந்துள்ளார்.

இதனையடுத்து விளையாட்டிற்கு அடிமையாகிய நிலையில் தனது நண்பரிடம் 6 லட்சத்திற்கும் மேலாக கடன் வாங்கி இருந்திருக்கிறார். பின்னர் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு வந்த ஆனந்தன் வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் அவரது பெற்றோருக்கு தனது மகன் ரம்மியில் 10,00,000 ரூபாய் இழந்துப் போனது தெரியவந்துள்ளது.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஆனந்தனை கண்டித்ததால் மன உளைச்சல் ஏற்பட்டு வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து வெளியில் சென்று விட்டு வந்த பெற்றோர் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு கதறி அழுதுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆனந்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |