Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“எனக்கு திருமணம் செய்து வையுங்கள்” வாலிபர் பெற்றோரிடம் தகராறு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பெற்றோர் திருமணம் செய்து வைக்காத காரணத்தினால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூர் வீரராகவபுரம் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது பெற்றோரிடம் சொந்தமாக தொழில் செய்வதற்கு பணம் தாங்கள் இல்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என அடிக்கடி மிரட்டி வந்துள்ளார். இதனால் பெற்றோர் அவருக்கு ஆட்டோ வாங்கி கொடுத்து இருக்கின்றனர். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான மாரிமுத்து ஆட்டோவை சரியாக ஒட்டாமல் பெற்றோரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து இருக்கிறார்.

அதன்பின் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெற்றோரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் எனக் கூறி தனது இடது கையை பிளேடால் வெட்டி உள்ளார். இதனை பார்த்து பயந்த பெற்றோர் திருமணம் செய்து வைப்பதாக கூறி சமாதானம் செய்துள்ளனர். இதனையடுத்து திடீரென வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மாரிமுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |