ஸ்கூட்டி நிலைதடுமாறிய தனியார் நிறுவனத்தின் மேலாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள லட்சுமணப்பட்டியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வராஜ் தனது குடும்பத்துடன் கோவையில் வசித்து வந்துள்ளார். அதன்பின் செல்வராஜ் தனது தாய், தந்தையை பார்ப்பதற்காக பேருந்தில் கரூர் வந்துள்ளார். அப்போது காந்தி கிராமத்தில் இருக்கும் தனது நண்பரின் ஸ்கூட்டரை வாங்கிக்கொண்டு ஏமூர் சாலை வழியாக சென்று கொண்டிருக்கும் போது வேகத்தடை இருப்பதை கவனிக்காமல் சென்று நிலைதடுமாறி அவர் கீழே விழுந்துள்ளார்.
இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் செல்வராஜ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.