திண்டுக்கல் மாவட்டத்தில் 12 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ஒரு பெண் தனது 12 வயது மகளை சிகிச்சைக்காக அழைத்து வந்தார். அச்சிறுமி ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். அவரை பரிசோதித்த டாக்டர் அதிர்ச்சி அடைந்தார். அச்சிறுமி கர்ப்பமாக இருப்பதாக அவருடைய தாயிடம் மருத்துவர் கூறினார். அதனைக் கேட்ட சிறுமியின் தாய் மிகவும் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து உடனடியாக அவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சிறுமியிடம் மகளிர் காவல்துறையினர் விசாரித்தபோது சிறுமலை பகுதியை சேர்ந்த வெள்ளியங்கிரி(40) என்பவர் ஆசை வார்த்தைகளை கூறி அச்சிறுமியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனால் அச்சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார்.
இதனையடுத்து சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வெள்ளியங்கிரியை, இன்ஸ்பெக்டர் அமுதா போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.
12 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.