Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே…. இது உங்கள் குழந்தைகளுக்கான பதிவு…. கொஞ்சம் படிச்சு பாருங்க…!!!!

சமீப காலமாகவே பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தாக்குதல்கள் அதிகரித்துகொண்டே வருகிறது. அதில் இருந்து அவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு பெற்றோரின் ஆதரவு மற்றும் பாலியல் குற்றங்கள் தொடர்ப்பன விழிப்புணர்வு முக்கியமானது ஆகும். இதுகுறித்து பெண் குழந்தைகளுக்கு எதையெல்லாம் கூற வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம். அதாவது பெண் குழந்தைகளுக்கு விவரம் தெரியவரும் பருவத்தில் உடலின் முக்கிய பாகங்கள், பிறப்பு உறுப்புகள், அதன் பெயர் என்று அனைத்தையும் தாய் தெளிவாகக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
இதில் எத்தகைய உணர்வு ஏற்படும் என்பதையும் சொல்லித் தருவது நல்லது. இதன் மூலமாக பாலியல் தொந்தரவு ஏற்பட்டால் பெண் குழந்தைகள் தெளிவாக மற்றும் எச்சரிக்கையாக இருக்க முடியும். எதேச்சையாக தொடுவதற்கும்,  தவறான நோக்கில் தொடுவதற்கும் உள்ள வித்தியாசம் எத்தகையது என்பதை, குழந்தைகளுக்கு கட்டாயம் சொல்லிக்கொடுக்க வேண்டும். இவற்றையெல்லாம் 3 வயதில் இருந்தே பெண் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்களால் பாலியல் தொல்லையில் இருந்து உடனடியாக சுதாரித்துத் தப்பிக்க முடியும்.
நண்பர்களை கவனமாகத் தேர்வு செய்தல், பேச்சு, பழக்கம் என அனைத்திலும் குறிப்பிட்ட எல்லையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை பெண் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். பெண் குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் சிறு பிரச்சினையாக இருந்தாலும், பெற்றோரிடம் சரியான நேரத்தில் பகிர கற்றுக்கொடுக்க வேண்டும். குழந்தைகளின் செயல்பாட்டில் ஏதேனும் வித்தியாசம் தெரிந்தால் பெற்றோர் அவற்றை கவனித்து அதற்கான சரியான காரணத்தைக் கண்டறிந்து, அவர்களை நல்வழிப்படுத்தினால், பிற்காலத்தில் ஏற்படும் ஆபத்தில் இருந்து முன்னரே காப்பாற்றலாம்.
நண்பர்களுடன் சேர்ந்து போட்டோ எடுக்கும்போது குழுவாக இருக்கையில் மட்டுமே எடுக்கும்படி அறிவுறுத்த வேண்டும். பிரச்சினையைக் கண்டு அஞ்சாமல் அதை எப்படி சமாளித்துத் தப்பிக்க வேண்டும் என்பதைக் கற்றுத் தருவது அவசியம். மேலும் பாதுகாப்பு இல்லாத இடமாக இருந்தால் பெண் குழந்தைகள் அங்கு தனியாகச் போவதை தவிர்க்க வேண்டும். செல்லும் இடத்தில் ஆபத்து இருப்பதை உணர்ந்தால் அங்கு இருந்து விலகி, பாதுகாப்பான இடத்திற்குச் சென்று, குடும்ப உறுப்பினர்களுக்குத் தகவல் தெரிவிப்பதற்குக் பெண் குழந்தைகளுக்கு கற்றுத் தருவது முக்கியமானது ஆகும்.

Categories

Tech |