Categories
சினிமா தமிழ் சினிமா

பேட்டைகாளி – வாடிவாசல்…. ஒரே மாதிரி கதையா…? விளக்கமளித்த வெற்றிமாறன்…!!!!!

தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் வெற்றிமாறன். இவர் தற்போது லாக்கப் நாவலை விசாரணை என்ற பெயரிலும் பூமணி எழுதிய வெட்கை நாவலை அசுரன் என்ற பெயரிலும் திரைப்படமாக எடுத்திருக்கின்றார். தற்போது இவர் வாடிவாசல் நாவலை அதே பேரில் இயக்க இருக்கின்றார். இத்திரைப்படத்தை தாணு தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கின்றார்.

மேலும் இந்த படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கின்றார். ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள ஜல்லிக்கட்டை மையப்படுத்தி பேட்டைகாளி தயாரித்திருக்கின்ற வெற்றிமாறன் வாடிவாசல் திரைப்படத்தையும் அது போன்ற கதையைத்தான் இயக்க இருப்பதாக செய்தி பரவியது. இந்த நிலையில் இது குறித்து விளக்கமளித்து வெற்றிமாறன் கூறியுள்ளதாவது, பேட்டைகாளி இன்னைக்கு நடக்குற விஷயம், வாடிவாசல் 1960 ஆம் வருடம் நடக்கும் கதை என கூறியுள்ளார்.

Categories

Tech |