Categories
உலக செய்திகள்

“எல்லாம் எங்க தல விதி”… அங்க போனது எங்க தப்பு தான்… புலம்பும் ரஷ்ய அதிகாரியின் குடும்பம்…!!

வடகொரிய எல்லைகள் அடைக்கப்பட்டதால் ரஷ்ய தூதரக அதிகாரியின் குடும்பம் பெட்டி படுக்கைகளுடன் தங்கள் நாட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர்.

கொரோனா பரவலை தடுப்பதற்காக வடகொரியா தனது எல்லைகளை மூடியதால் Vladislav Sorokin என்ற  ரஷ்ய தூதரக அதிகாரியின் குடும்பத்தை சேர்ந்த 8 பேர் ரயில்பாதையில் டிராலியின் மூலம் தங்களது பெட்டி படுக்கையை தள்ளிக் கொண்டு வரும் வீடியோ வெளியாகி உள்ளது. தங்கள் நாட்டில் கொரோனா  என்ற ஒரு வைரஸே பரவவில்லை என்றும் அதனால் ஒருவருக்கு கூட பாதிப்பு ஏற்படவில்லை என்றும் வட கொரியா கூறி வருகிறது. இந்நிலையில் நாட்டிற்குள் கொரோனா வைரஸ் நுழைவதை தடுப்பதற்காக மற்ற நாடுகளுடனான அனைத்து வகை பயணப் போக்குவரத்தையும்  வடகொரியா நிறுத்தியது.

மேலும் நாட்டின் எல்லைகளையும் அடைத்துவிட்டது. இந்நிலையில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்,  தனது நாட்டில் கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் அளவிற்கு போதுமான மருத்துவ வசதி இல்லாததால் இந்த கட்டுப்பாடுகளை அமல்படுத்தியிருக்கலாம் என்று நிபுணர்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. ஒரு வருடத்திற்கும் மேலாக எல்லைகள் மூடப்பட்டதால் இந்த மாதிரியான கஷ்டங்களை அனுபவித்து கொண்டு வீட்டிற்கு திரும்ப வேண்டிய நிலை உருவாகியுள்ளது என்று ரஷ்ய  தூதரக அதிகாரியின் குடும்பம் சோகத்துடன் கூறியுள்ளது.

Categories

Tech |