ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உரிய அனுமதி வேண்டி மாவட்ட கலெக்டரிடம் கிராம மக்கள் சார்பாக மனு கொடுக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அன்னமங்கலம் கிராமத்தில் இருக்கும் ஜல்லிக்கட்டு நல சங்கத்தின் தலைவர் பாஸ்கர் தலைமையில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து நேற்று கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
அந்த மனுவில் “அன்னமங்கலத்தில் வரும் மார்ச் மாதம் 14 ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அப்பகுதியில் இருக்கும் விழா குழு மற்றும் கிராம மக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் அரசு சார்பில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி தந்து பாதுகாப்பிற்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.