உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால் நினைவுச் சின்னத்தின் பெயர் மாற்றம் செய்யப்படும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் பல்லியா மாவட்டத்தில்பைரியா தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் எம் எல் ஏ சுரேந்திர சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால் நினைவுச் சின்னத்தின் பெயரை ராம் மஹால் என்று மாற்றம் செய்யப்படும் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் .மேலும் அவர் தாஜ்மஹால் முதலில் ஒரு சிவன் கோயிலாக இருந்து என்றும் இது உத்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியில் ராம் மஹால் என்று பெயர் மாற்றப்படும் என்று ம் கூறியுள்ளார்.
இதனையடுத்த கடந்த சனிக்கிழமை அவர் அளித்த பேட்டியில் , ஆக்ராவின் தாஜ்மஹால் ஒரு காலத்தில் சிவபெருமானின் ஆலயமாக இருந்து. சிவாஜியின் வழித்தோன்றல் என்று உ.பி முதல்வர் யோகி ஆதிநாத்தை அவர் பாராட்டியுள்ளார். மேலும் சிவாஜியின் வழித்தோன்றல்கள் உத்தரபிரதேச தேசத்திற்கு வந்தது உள்ளனர் . அதுபோலவே சமர்த் குரு ராமதாஸ் சிவாஜியை இந்தியாவுக்கு கொடுத்தது போல கோரக்நாத் ஜி யோகி ஆதித்யநாத்தை உத்தரப் பிரதேசத்திற்கு வழங்கியுள்ளார் என்று அவரைக் குறித்து புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும் மொராதாபாத்தில் மார்ச் 13 ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பாஜக எம்எல்ஏ கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார் .அதனால் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் 20 கட்சி தொண்டர்கள் மீதும்ஊடகவியலாளர்களை தாக்கியதால் அவர்களில் சில பேருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளது .இந்தச் சம்பவம் பத்திரிகையாளர்கள் மீது வன்முறையைப் பிரயோகிக்கும் சமாஜ்வாடிஸின் உண்மை தன்மையை காட்டுகிறது. மேலும் யோகி ஜி ஆட்சியின்கீழ் இது பொறுத்துக்கொள்ள படாது என்றும் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் தேச விரோத மனப்பான்மை கொண்டவர்களுக்கு எந்த முன்னுரிமையும் வழங்க மாட்டாது. இந்தியாவின் பெருமையும், அதன் தனித்தன்மையும் பேசுபவர்கள் மட்டுமே என் நாட்டின் தலைவர்களாக மாறுவார்கள் என்றும் கருத்துகளை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.மேலும் கடந்த ஆண்டு ஹைத்ராஸில் ஒரு சிறுமி மிக கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பிறகு சிறுமிகளுக்கு கலாச்சாரத்தை கற்பித்தால் கற்பழிப்பு நிறுத்தப்படலாம், என்று அவர் கூறியிருந்தது மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது ..