Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பெயிண்டர் அடித்துக் கொலை…. வசமாக சிக்கிய நண்பர்…. போலீஸ் விசாரணை….!!

பிறந்தநாளை கொண்டாடிய பெயிண்டரை அடித்துக் கொலை செய்த நண்பரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நவ்வலடி பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் ரமேஷ் திசையன்விளை-நவ்வலடி சாலையில் உள்ள தனியார் வங்கி அருகில் நண்பர்களுடன் சேர்ந்து தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது அவர்கள் மது போதையில் இருந்துள்ளனர். இந்நிலையில் திடீரென அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த அவரது நண்பரான திசையன்விளை பகுதியில் வசிக்கும் முருகானந்தம் என்பவர் ரமேஷ் தலையில் இரும்பு கம்பியால் பலமாக அடித்துள்ளார். இதில் ரமேஷ் பலத்த காயமடைந்தார்.

இதனையடுத்து திசையன்விளையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ரமேஷை சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அதன்பின் ரமேஷை அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரமேஷின் உடலை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தலை மறைவாக இருந்த முருகானந்தத்தை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |