மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் முகமது அப்துல் சலீம் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சார்க் என்ற மகன் இருந்துள்ளார். இவர் நாகை மாவட்டத்திலுள்ள வண்டுவாஞ்சேரி சேர்ந்த முருகேசன் என்பவரிடம் ஒப்பந்தப் பணியாளராக பெயிண்ட் அடிக்கும் பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில் தஞ்சையிலுள்ள ஒரு வீட்டில் சார்க் பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கும்போது திடீரென மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சார்க்கின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தஞ்சை மருத்துவகல்லூரி இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் உட்ரோ வில்சன் முருகேசன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.