தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்கி வருகின்றது. முன்பு பிஎஃப் பணத்தை எடுப்பதற்கு மட்டுமல்லாமல் மற்ற அனைத்து அப்டேட் களுக்கும் பிஎஃப் அலுவலகத்திற்கு நடக்க வேண்டியது இருக்கும். ஆனால் தற்போது ஆன்லைன் மூலமே எல்லா வசதிகளும் கொண்டு வரப்பட்டுள்ளது. வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலமாக பிஎஃப் தொடர்பான அனைத்து சேவைகளையும் பெறலாம்.
அதன்படி அப்டேட் செய்வதும் மிகவும் ஈஸி. அதன்படி திருமணமான பிறகு பெரும்பாலானோர் பெண்கள் தங்களின் பெயரை பிற்பாதியில் கணவரின் பெயரையும் இணைத்துக் கொள்ள விரும்புவார்கள். அதனால் பிஎஃப் மற்ற கணக்குகளும் அவர்களது பெயரை அப்டேட் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அதன்படி பிஎஃப் கணக்கில் பெயரை அப்டேட் செய்வது மிகவும் சுலபம். அதற்கு பெண்ணின் திருமண சான்றிதழ் போன்ற ஏதேனும் ஒரு ஆவணத்தை பெயர் மாற்றத்திற்கு வழங்க வேண்டியிருக்கும். ஆன்லைன் மூலமாக அப்டேட் செய்ய பிஎஃப் அமைப்பின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
https://www.epfindia.gov.in
அதில் ஐடி மற்றும் பாஸ்வர்டு கொடுத்து உள்நுழைய வேண்டும்.
”manage” என்ற வசதியைத் தேர்ந்தெடுத்து அதில் “Modify Basic Details” என்பதை கிளிக் செய்யவும்.
அங்கே உங்களுடைய பெயர்/ surname போன்றவற்றைப் பதிவிட்டு “update” கொடுக்கவும்.
இதற்கு முன்னர் உங்களது ஆதாரில் பெயர் அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும். பிஎஃப் போர்ட்டலில் உங்களது பெயர் விவரங்களை அப்டேட் செய்யும்போது அதற்கான KYC ஆவணங்களும் உங்களிடம் இருக்க வேண்டும்.