Categories
தேசிய செய்திகள்

PF அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள்…. இப்படி மட்டும் பண்ணாதீங்க…. புதிய விதிகள் அமல்….!!!!

PF எனப்படும் பணியாளர் வருங்கால வைப்புநிதி ஒரு நீண்ட கால சேமிப்பு மற்றும் முதலீட்டு கணக்காகும். இது ஊழியர், நிர்வாகம் மற்றும் சில சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தின் பங்களிப்பால் உருவாக்கப்படும் ஒரு சேமிப்புநிதி என்பது கவனிக்கத்தக்கது. இது பணியாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பால் (இபிஎஃப்ஓ) நடத்தப்படும் ஒரு சமூகப்பாதுகாப்புத் திட்டம் ஆகும். இந்த நிதி ஓய்வுக்குப் பின் ஊழியர்களின் நிதிப்பாதுகாப்பை உறுதி செய்கிறது. பிஎப் கணக்கில் பல்வேறு வருடங்களாக டெபாசிட் செய்யப்பட்ட தொகை, வட்டியுடன் சேர்ந்து ஓய்வு பெறும்போது பணியாளருக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் பல்வேறு சமயங்களில் போதிய தகவல் இல்லாததாலும், சிலதவறுகள் காரணமாகவும் ஊழியர்களின் பிஎப் கணக்கு மூடப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறது. எனவே பிஎப் உறுப்பினர்கள், EPFO விதிகளை நன்கு தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் ஊழியர் ஒருவர் முன்னதாக ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு புது நிறுவனத்திற்கு மாறும்போது அவரது பிஎப் கணக்கை மாற்றாமல் இருந்து பழைய நிறுவனம் மூடப்பட்டாலோ, அந்த நபரின் PF கணக்கிலிருந்து 36 மாதங்களுக்கு எந்தப் பரிவர்த்தனையும் இல்லை என்றாலோ ஊழியரின் PF கணக்கு மூடப்பட்டு அத்தகைய கணக்குகளை “செயல்படாத” பிரிவில் சேர்க்கப்படும்.

அவ்வாறு செயல்படாத கணக்காக மாறிய கணக்கை மீண்டுமாக செயல்பட வைப்பதற்கு பிஎப்-க்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். அதுமட்டுமின்றி கணக்கு “செயல்படாத” நிலைக்கு சென்றாலும் கணக்கில் உள்ள பணத்திற்கு வட்டி தொடர்ந்து கிடைக்கிறது. அந்த வகையில் ஊழியரின் பணம் வீணாகாமல் அதனை திரும்பப் பெறுவார். இதற்கு முன்பாக இந்தக்கணக்குகளுக்கு வட்டி கிடைத்ததில்லை. ஆனால் கடந்த 2016-ல் விதிகள் திருத்தப்பட்டு இத்தொகைக்கான வட்டி தொடங்கப்பட்டது. ஊழியர் 58 வயதை அடையும்வரை உங்கள் பிஎப் கணக்கில் வட்டி சேரும் என்பதை அறிந்திருக்க வேண்டும்.

Categories

Tech |