Categories
தேசிய செய்திகள்

PF கணக்கில் பேலன்ஸ் தொகை எவ்வளவு உள்ளது….? அதை எப்படி பார்ப்பது….? இதோ எளிய வழிமுறை….!!!!

உங்களின் பிஎஃப் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை வீட்டில் இருந்து கொண்டே நம்மால் பார்க்க முடியும், அதை பற்றி இதில் நாம் தெரிந்துகொள்வோம்.

ஊழியர்களின் ஓய்வுக்குப் பிறகு அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க உதவவே ஒரு சிறிய தொகை வருங்கால வைப்பு நிதிக்கு ஒதுக்கப்படுகிறது. இது மட்டுமல்லாது பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும், பல நன்மைகள் உள்ளன. பழைய வழிமுறையை தேர்ந்தெடுப்பதன் மூலம் இபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் வருமான வரியின் பிரிவு 80 சி இன் கீழ் தங்கள் சம்பளத்தில் 12% வரிகளை சேமிக்க முடியும்.

அதே போல் இபிஎப்ஓ சட்டத்தின்படி 12 சதவீதம் பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. அதில் 8.33% ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்திற்கும் செல்கிறது. பத்தாண்டுகள் ஒருவர் கணக்கில் தொடர்ச்சியாக இத்தொகை செலுத்தப்பட்டு வந்தால் அவருக்கு குறிப்பிட்ட தொகையை ஓய்வூதியதமாக கிடைக்கும்.

எப்படி பார்ப்பது:

முதலில் இந்த https://www.epfindia.gov.in இணையதளம் உள்ளே சென்று EPF Balance” என்ற ஆப்ஷன் உள்ளே செல்ல வேண்டும். பின்னர் இந்த புதிய பக்கத்திற்கு https://www.epfoservices.in/epfo சென்று பிறகு உறுப்பினர் இருப்பு தகவல்”(Member Balance Information) பகுதிக்கு செல்ல வேண்டும். அதன்பின் உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து, ஈபிஎஃப் அலுவலகம், ஸ்தாபனக் குறியீடு, பிஎஃப் கணக்கு எண் மற்றும் பிற விவரங்களை உள்ளிட வேண்டும். இறுதியில் சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்தால், உங்கள் பி.எஃப் இருப்பு தொகை உங்களுக்கு காண்பிக்கும்.

இதுதவிர மற்றொரு வழி உண்டு, அது என்னவென்றால் உங்களுடைய இருப்புத் தொகையை சரிபார்க்க, எஸ்.எம்.எஸ் அல்லது தவறவிட்ட அழைப்பு சேவை மூலம் யுஏஎன் எண் இருந்தால் ஈபிஎஃப்ஒ உறுப்பினர்கள் தங்கள் பிஎஃப் நிலுவை சரிபார்க்க முடியும். எஸ்.எம்.எஸ் வழியாக பி.எஃப் இருப்பை நீங்கள் சரிபார்க்க, உறுப்பினர் / சந்தாதாரர் பதிவுசெய்த மொபைல் எண்ணிலிருந்து 7738299899 க்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். எஸ்எம்எஸ் வடிவம் மூலம் ‘EPFOHO UAN.’ என்று அனுப்பினால் உங்கள் பி.எஃப் இருப்புடன் எஸ்.எம்.எஸ்-க்கு ஈ.பி.எஃப்.ஓ பதிலளிக்கும். இதற்கடுத்து பதிவுசெய்த மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண் மூலம் தொடர்பு கொண்டு உங்கள் ஈபிஎஃப் இருப்புநிலையையும் சரிபார்க்கலாம்.

Categories

Tech |