இந்தியாவை பொறுத்த வரையில் முதலீட்டாளர்களை கவரும் வகையில், முதலீட்டு திட்டங்கள் பல உள்ளன. அவற்றில், பொது வருங்கால வைப்பு நிதி திட்டம், மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. மேலும் பாதுகாப்பான மற்றும் கணிசமான வருவாய் கொடுக்கும் ஒரு திட்டமாகவும் உள்ளது. எனவே இத்திட்டத்தில் சேமிப்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்நிலையில் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் என்பது அரசு மற்றும் அரசு சாரா நிறுவன ஊழியர்களுக்கு எதிர்கால நிதி குறித்து பாதுகாப்பு வழங்கவும் மற்றும் ஓய்வூதியத்திற்கான பாதுகாப்பை வழங்கவும் செயல்பாட்டில் உள்ள திட்டம் ஆகும் . மேலும் இத்திட்டம் 1968-ஆம் ஆண்டில் மத்திய நிதி அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இது ஒரு நீண்ட கால முதலீட்டு திட்டமாகவும் மற்றும் முதலீட்டுக்கு பங்கமில்லாத ஒரு திட்டமாகவும் விளங்குகிறது.
எனவே இந்த திட்டத்தின் படி, கணக்கைத் தொடங்க ரூபாய் 100 இருந்தால் போதும். ஆகவே இத்திட்டத்தில், இளமை பருவத்தில், சேர்ந்து விட்டால் பணியிலிருந்து ஓய்வு பெறும் போது மிகப் பெரிய தொகையைப் பெறலாம். இதையடுத்து தபால் நிலையம் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா போன்ற சில வங்கிகளிலும் பிஎப் கணக்கு தொடங்கும் வசதியும் உள்ளது.
மேலும் இத்திட்டத்தில் வரிச்சலுகையும் உள்ளது. எனவே இதற்கான வட்டி விகிதத்தினை அரசு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு காலாண்டிலும் மாற்றியமைத்து வருகிறது. எனவே தற்போது இந்த விகிதமானது 7.1% ஆக உள்ளது. மேலும் இந்த திட்டமானது 15-ஆண்டுகால திட்டமாக உள்ளது. இதையடுத்து இத்திட்டத்தின் கால வரம்பு 15-வருடம் என்றாலும், இந்த திட்டத்தின் முதிர்வுக்கு பின், 5 வருட தொகுதிகளாக தொடரலாம் என்பதால், இது இன்னும் கூடுதல் நன்மையாகவும் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அரசின் இந்த பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்வதற்கு, மாதத்திற்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் செலுத்தலாம். இவ்வாறு அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து கொள்ளலாம். ஆனால் அவ்வாறு முதலீடு செய்யும் தொகையை, 15-ஆண்டுகளுக்கு முன், எடுக்க முடியாது. மேலும் இந்த திட்டம் கண்டிப்பாக 15-ஆண்டுகள் வரை செயல்பாட்டில் இருக்கும். எனவே பிஎப் கணக்கில் உள்ள மொத்த தொகையையும் எடுக்க வேண்டும் என்றால், 15-ஆண்டுகளுக்கு பின் மட்டுமே எடுக்க முடியும் என்ற விதிமுறையும் உள்ளது.