PF கணக்கு வைத்திருக்கும் உறுப்பினர்கள் அனைவரும் தங்களுடைய UAN எண்ணை activate செய்து வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். இருப்பினும் நீங்கள் இதுவரை activate செய்யாமல் இருந்தால் கவலைப்பட வேண்டாம். வீட்டில் இருந்துக்கொண்டே ஆன்லைன் மூலமாக மிக எளிதாக ஆக்டிவேட் செய்ய முடியும். எவ்வாறு செய்யலாம் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
உதலில் pf அமைப்பின் www.epfindia.gov.in. என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்கு செல்லவும்.
இதனையடுத்து “Our Services” என்ற வசதியின் கீழ் “For Employees”என்பதை கிளிக் செய்யவும்.
பின்னர் “Member UAN/ Online Services” என்ற சேவையில் “Activate Your UAN” என்பதை கிளிக் செய்யவும்.
இப்போது உங்களின் UAN நம்பர், பெயர், பிறந்த தேதி, செல்போன் எண், கேப்ட்சா குறியீடு போன்ற விவரங்களைப் பதிவிட வேண்டும்.
இந்த விவரங்களை எல்லாம் பதிவிட்டு “Get Authorization Pin” என்பதை கிளிக் செய்தால் உங்களது செல்போனுக்கு ஒரு OTP எண் வரும்.
இறுதியாக “Validate OTP andActivate UAN என்பதை கிளிக் செய்தவுடன் உங்களது PF கணக்கில் இணைக்கப்பட்டுள்ள UAN நம்பர் activate ஆகிவிடும்.