இந்தியாவில் மாதச்சம்பளம் வாங்குபவர் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோர்கள் சம்பளத்தின் ஒரு பகுதியை வைப்பு நிதி மற்றும் ஓய்வூதிய திட்டத்திற்காக தொழிலாளர் வைப்பு நிதியை கொண்டுள்ளனர். இந்த சேமிப்பு நிதியானது அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு மாதாந்திர ஓய்வூதியமாகவோ அல்லது மொத்தமாகவோ அவர்களிடம் வழங்கப்படுகிறது. தற்போது ஊழியர்கள் வைப்பு நிதி ஆணையம் PF கணக்கில் பல்வேறு வழிமுறைகளை கொண்டு வந்துள்ளது. அதன் படி தற்போது PF கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தங்கள் நாமினியை கணக்கில் வைத்திருக்க வேண்டும்.
ஏனென்றால் PF உறுப்பினர் திடீரென இறந்து விட்டால் அவரது நாமினிக்கு தான் PF பலன்கள் மாற்றப்படும். எனவே நாமினியை தேர்வு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து PF நாமினேஷன் கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி தான் கடைசி நாள் என்று அறிவிக்கப் பட்டது. ஆனால் நிறைய பேர் நாமினியை தாக்கல் செய்யவில்லை என்பதால் கூட்டுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது டிசம்பர் 31 ஆம் தேதிக்குப் பிறகு PF கணக்குத்தாரர்கள் ஆன்லைனில் நாமினியை பதிவு செய்யலாம் என்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே உடனடியாக நாமினியை பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
பிஎம் அமைப்பின் https://www.epfindia.gov.in/site_en/index.php என்ற வெப்சைட்டில் செல்ல வேண்டும்.
அதன் பிறகு SERVICE ஆப்சனில் Employees செக்சனை கிளிக் செய்யவும்.
புதிய பக்கம் ஒன்று திறக்கும். அதில் Member UAN / Online Service அப்சனைத் தேர்ந்தெடுக்கவும்.
இப்போது உங்களுடைய பிஎஃப் நம்பர் (UAN) மற்றும் பாஸ்வர்டு கொடுத்து லாகின் செய்யவும்.
அடுத்ததாக, MANAGE டேபில் சென்று E-Nomination என்பதைத் தேர்ந்தெடுத்து, YES கொடுத்து ஃபேமிலி டெக்லரேசனை அப்டேட் செய்ய வேண்டும்.
அதன் பின்னர், Add Family Details கிளிக் செய்து Nomination Details என்பதை தேர்ந்தெடுக்கவும்.
கடைசியாக Save EPF nomination கிளிக் செய்ய வேண்டும். அடுத்த பக்கத்தில் e-sign ஆப்சனை கிளிக் செய்யவும்.
இப்போது உங்களுடைய மொபைல் நம்பருக்கு ஓடிபி வரும். அதைப் பதிவிட்டு SUBMIT கொடுக்க வேண்டும்.