இந்தியாவில் கடந்த 2020 ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பொருளாதார ரீதியாக மக்கள் சிரமப்பட்டு வந்தனர். அதுமட்டுமில்லாமல் வேலை கிடைப்பது அவர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. எனவே பொருளாதார வளர்ச்சியின் மீட்டெடுக்கவும், நாட்டு மக்களின் நிதி நெருக்கடியை சமாளிக்கவும், வேலைவாய்ப்புகள் உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு ஆத்மநிர் பாரத் ரோஜ்கார் யோஜனா என்ற வேலை வாய்ப்பு திட்டத்தை 2020 அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டம் வேலைவாய்ப்பு ஊக்குவிப்பதற்காகவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. அதன்படி புதிய ஊழியர்களுக்கு 2 ஆண்டு காலத்திற்கு மத்திய அரசு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் 1000 பேர் பணிபுரியும் நிறுவனத்தின் புதிய ஊழியர்களுக்கான சம்பளத்தில் ஊழியர்களின் பங்களிப்பு 12% மற்றும் நிறுவனத்தின் பங்களிப்பு 12% என்று 24% பங்களிப்பு தொகை தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதியில் வரவேற்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் ஏற்கனவே 2001 ஜூன் 30-ஆம் தேதி நீட்டிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது 2022 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் சுமார் 71.8 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த திட்டத்தால் 2021 ஜூன் 18-ம் தேதி வரை 21.42 லட்சம் பேர் வேலைவாய்ப்பு மற்றும் பிஎஃப் தொகை பெற்று பயன் பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.