Categories
தேசிய செய்திகள்

PF கணக்கு வைத்திருப்போருக்கு…. ரூ.20,000 அடிப்படை சம்பளத்தில் ரூ.2 கோடி பெறும்…. சூப்பர் திட்டம்….!!!!

எதிர்கால தேவைக்காக தங்களது பணத்தை சேமித்து வைக்க விரும்பும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் ( EPFO ) கணக்கு வைத்திருந்தால் ரூ.20 ஆயிரம் அடிப்படை ஊதியத்தில் ரூ.2 கோடி வரை பெறும் சூப்பர் திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்களுடைய எதிர்காலத்தை பாதுகாத்து கொள்வதற்காக ஒவ்வொருவரும் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை வெவ்வேறு இடங்களில் முதலீடு செய்கின்றனர். ஆனால் முதலீடுகளில் நஷ்டமும் இருக்கலாம், லாபமும் இருக்கலாம். ஒருவேளை ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனங்களில் கணக்கு வைத்திருந்தால் இந்த சேமிப்பு நல்ல பலனுள்ளதாக இருக்கும். அதாவது ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் ( EPFO ) கணக்கு வைத்திருந்தால் அவர்களுடைய வருமானத்தில் ஒரு பங்கை EPF-ல் முதலீடு செய்யலாம். இதன் மூலம் ஊழியர்கள் ஓய்வு பெறும் போது மிகப்பெரிய தொகையை பெற முடியும்.

மேலும் நிபுணர்களின் கூற்றுப்படி, ஊழியர் ஒருவருடைய அடிப்படை வருமானம் ரூ. 20 ஆயிரமாக இருந்து அவருடைய 25 வயதிலிருந்து EPF 24 சதவீதம் ( 12% முதலாளி + 12% பணியாளர் ) கழிக்கப்பட்டால் ரூ.4,800 ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஊழியர்கள் 25 ஆண்டுகள் முதலீடு செய்தால் சுமார் ரூ.2 கோடிக்கு மேல் ஓய்வுபெறும் போது பெற இயலும். அதோடு மட்டுமில்லாமல் நீங்கள் முதலீடு செய்யும் போது வட்டி விகிதம் 8.5 % கிடைக்கும். மேலும் சம்பள உயர்வு 7% என்றால் நாம் 25 வயதில் இருந்தே முதலீடு செய்யும் போது அந்த பணம் ஓய்வு காலத்தில் நம்மை பில்லியனராக மாற்றும்.

இந்த சேமிப்பினை நாம் எப்போதிலிருந்து தொடங்கலாம் :-

* 30 வயதில் அடிப்படை ஊதியம் ரூ.28,051 எனில் நமக்கு ஓய்வு பெறும் போது ரூ.2.3 கோடி கிடைக்கும்.

* 35 வயதில் சம்பளம் ரூ.39,343 எனில் நாம் ஓய்வு பெறும்போது ரூ.1.8 கோடி பெற முடியும்.

* 40 வயதில் அடிப்படை சம்பளம் ரூ. 55,181 எனில் ரூ.1.42 கோடி வரை ஓய்வு பெறும்போது லாபமாக கிடைக்கும்.

* 45 வயதில் அடிப்படை வருமானம் ரூ.77,394 எனில் ஓய்வு பெறும் போது ரூ.1.03 கோடி கிடைக்கும்.

* 50 வயதில் அடிப்படை வருமானம் ரூ.1,08,549 என்றால் ஓய்வு பெறும் போது நமக்கு ரூ.66.44 லட்சம் கிடைக்கும்.

மேலும் வாடிக்கையாளர்கள் அவசர தேவைக்காகவோ அல்லது அவசியமான வேலைக்காகவோ இல்லாமல் உங்களுடைய கணக்கிலிருந்து பணம் எடுத்தால் ஓய்வூதிய சேமிப்பு குறையும் என்பதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது நீங்கள் 30 வயதில் ரூ.1 லட்சத்தை உங்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து நீக்கினால் உங்கள் ஓய்வூதிய சேமிப்பு 60 வயதில் ரூ.11.55 லட்சம் வரை குறைக்கப்படும்.

அதோடு மட்டுமில்லாமல் நீங்கள் ஒருவேளை வேலையிலிருந்து மாறினால் உங்களுடைய பழைய கணக்கு பரிமாற்றத்தை மட்டுமே பெற்று கொள்ள முடியும். ஒருவேளை நீங்கள் உங்களுடைய கணக்கை மாற்றாவிட்டால் வட்டி புதிய கணக்கில் சேரும். அதேசமயம் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பழைய கணக்கின் வட்டி நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Categories

Tech |