பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் பிஎப் சந்தாதாரர்களுக்கு விரைவில் ஒரு நல்ல செய்தியை வழங்க இருக்கிறது. அந்த வகையில், ஊழியர்கள் தங்களது கணக்கில் 40 ஆயிரம் ரூபாயை பெறக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
தங்களது கணக்கில் 5 லட்சம் ரூபாய் கொண்டுள்ள பிஎப் கணக்குதாரர்களுக்கு அவர்களது கணக்கில் ரூபாய்.40 ஆயிரம் வட்டி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, பிஎப் கணக்கில் ரூபாய்.5 லட்சம் டெபாசிட் செய்யப்பட்ட ஊழியர்கள், 40 ஆயிரம் ரூபாயை வட்டியாக பெறலாம். வட்டித் தொகை விரைவில் பிஎஃப் கணக்கிற்கு மாற்றப்படும் என ஊடக செய்திகள் தெரிவிக்கிறது.