பிஎப் சந்தாதாரர்களின் வங்கி கணக்கில் EPF மீதான வட்டி வரவு வைக்கப்பட ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2021- 22 நிதியாண்டில் ஊழியர்களின் கணக்குகளுக்கு 8.1 சதவீதம் வட்டி சென்றடையும். இந்த வட்டியானது மார்ச் 2022ல் திருத்தப்பட்டது. ஆனால் நிதி அமைச்சகம் ஜூன் மாதத்தில் அதற்கு ஒப்புதல் அளித்தது. வழக்கமாக பிஎஃப் சந்தாதாரர்களுக்கு தீபாவளிக்கு முன்னதாகவே அவர்களுடைய கணக்கில் வட்டி வந்து சேரும். ஆனால் இந்த முறை மென்பொருள் அப்டேட் செய்ய வேண்டிய இருந்த காரணத்தினால் இது தாமதமானது. இப்போது பிஎஃப் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை சரி பார்ப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
PF பாஸ்புக்கை EPFO இன் உறுப்பினர் போர்டல் மூலம் ஆன்லைனில் சரிபார்க்கலாம். 2021-22 நிதியாண்டுக்கான வட்டியும் தற்போதைய இருப்புத் தொகையும் தெரியும். யுனிவர்சல் கணக்கு எண் (யுஏஎன்) மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி போர்ட்டலில் உள்நுழையவும். மீதித் தொகையும் போர்டல் மூலம் அறியப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட மொபைலில் இருப்புத் தகவல் குறுஞ்செய்தியாகப் பெறப்படும்.
உங்கள் மொபைல் எண்ணிலிருந்து 7738299899க்கு ‘EPFOHO(your)UAN’ என குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் உங்கள் இருப்பைச் சரிபார்க்கலாம். மீதித் தொகை இதன் மூலம் பெறப்படும். எவ்வளவு வட்டி வந்துள்ளது என்பதை அறிய முடியாது. மிஸ் கால் பயன்படுத்தி பேலன்ஸ் சரிபார்க்கும் வசதியும் உள்ளது. 011-22901406 மற்றும் 9966044425 ஆகிய எண்களில் ஏதேனும் ஒரு மிஸ்டு கால் கொடுக்கவும். பி.எப். அறக்கட்டளைகளால் நிர்வகிக்கப்படும் கணக்குகளில் இருப்பு அல்லது வட்டியை இவ்வாறு அறிய முடியாது.