Categories
தேசிய செய்திகள்

PF சந்தாதாரர்களே…! இதை மட்டும் பண்ணாதீங்க…. உங்க பணத்துக்கு ஆபத்து….!!

ஆன்லைன் மோசடிகள் நடைபெற்று வருவதால் பிஎஃப்  நிறுவனம் தனது உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தனது உறுப்பினர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் சமூக ஊடகங்களில் பிஎஃப் பற்றிய தகவலை பகிர கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறு ஒரு சமூக ஊடகத்தில் பகிர்வதால் பெரிய மோசடிகளுக்கு ஆளாகலாம். மேலும் பிஎஃப் அமைப்பு தனது வாடிக்கையாளர்களிடம் ஒருபோதும் பான் கார்டு, ஆதார் கார்டு,  வங்கி விவரங்கள், போன்ற தகவல்களை கேட்காது எனவும் கூறியுள்ளனர்.

இதுபோன்ற தகவல்களை தொலைபேசி அல்லது சமூக ஊடகங்களில் கேட்டால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது. இதுகுறித்து  பிஎஃப் அமைப்பு தனது  வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில் “ஆதார் கார்டு, பான் கார்டு, பிஎஃப் வங்கி கணக்கு, அல்லது ஓடிபி போன்ற தனிப்பட்ட விவரங்களை தொலைபேசி அல்லது சமூக ஊடங்களில் பகிர வேண்டாம்”. மேலும் வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் எந்த தொகையும் செய்யEpfo ஒருபோதும் கேட்பதில்லை எனவும் அறிவித்துள்ளது.

ஃபிஷிங் என்பது ஆன்லைன் முறையில் ஒரு பகுதியாகும். இதன் மூலம் பிஎஃப் பணத்தை ஆன்லைன் மூலமாக மோசடி  செய்கின்றனர். இதில் டெபாசிட் செய்பவர்களே வரப்பட்டு அவர்களிடம் கணக்கு தொடர்பான தகவல்கள் பெறப்பட்டு பணம் திருடப்படுகிறது. மேலும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வேலைக்கு செல்பவர்கள் மீது தான் இதுபோன்ற மோசடிகள் அதிகம் விரும்பி நடப்பதாகவும் அவர்கள் இன்னும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் பெரிய அமைப்பு எச்சரித்துள்ளது.இவ்வாறுதனது ட்விட்டர் பக்கத்தில்  கூறியுள்ளது.

Categories

Tech |