Categories
அரசியல்

PF பணத்தை எடுக்க…. எங்கும் போக வேண்டாம்…… இந்த ஒரு ஆப் போதும்….!!!!

வீட்டில் இருந்துகொண்டு பிஎஃப் பணத்தை எப்படி எடுக்கலாம் . அதற்கான வழிமுறைகளை இதில் தெரிந்து கொள்வோம்.

பிஎஃப் விவரங்களை சரிபார்க்கவும், அப்டேட் செய்யவும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகத்திற்கு செல்ல வேண்டியது அவசியம். அவர்களின் சுமையை குறைப்பதற்காக அரசுத் தரப்பிலிருந்து என்ற உமாங் மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியில் இருந்த இடத்தில் இருந்துகொண்டே பிஎஃப் தொடர்பான அனைத்து சேவைகளையும் பெற முடியும்.

அதாவது பேலன்ஸ் பார்ப்பது பணத்தை எடுக்க கிளைம் செய்வது, தகவல்துறை போன்ற பல சேவைகளை இதில் செய்து கொள்ளலாம். தற்போதைய நிலையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொடர்பான 16 விதமான சேவைகளை உமாங் செயலி மூலமாக வாடிக்கையாளர்கள் பெற்று வருகின்றனர்.குறிப்பாக, பிஎஃப் பேலன்ஸ் பார்ப்பதற்கு இச்செயலி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

எப்படி பேலன்ஸ் பார்ப்பது:

உமாங் செயலியை ஓப்பன் செய்து ’EPFO’ என்ற வசதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் ’Employee Centric services’ என்பதில் உள்ள ‘View Passbook’ என்ற வசதியை கிளிக் செய்ய வேண்டும்.

உங்களுடைய பிஎஃப் எண்ணைப் பதிவிட வேண்டும். உடனடியாக பிஎஃப் கணக்குடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அந்த ஓடிபி நம்பரை பதிவிட்டு சமர்ப்பிக்க வேண்டும். உடனடியாக பிஎஃப் பேலன்ஸ் உள்ளிட்ட விவரங்களை உங்களால் பார்க்க முடியும்.

எப்படி பிஎஃப் பணத்தை எடுப்பது:

உமாங் ஆப்பில் EPFO ஆப்ஷனை தேர்ந்தெடுத்து ‘Employee Centric’ ஆப்ஷனை கிளிக் செய்து, ‘Raise Claim’ வசதியை கிளிக் செய்ய வேண்டும். இப்போது உங்களது EPF UAN நம்பரைப் பதிவிட வேண்டும். உங்கள் மொபைல் நம்பருக்கு அனுப்பப்படும் OTP எண்ணைப் பதிவிட்டு, பணம் எடுக்கும் முறையை தேர்வு செய்து ‘Submit’ கொடுக்க வேண்டும். முடிவில் உங்களுக்கு ‘Claim reference number’ அனுப்பப்படும். அதைப் பயன்படுத்தி உங்களது கோரிக்கையின் நிலவரத்தை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

Categories

Tech |