மாத சம்பளத்திற்கு வேலை செய்யும் ஊழியர்கள் அனைவரும் வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருப்பது வழக்கமான ஒன்றுதான். PF என்றால் மாதம்தோறும் சம்பளத்தில் ஒரு தொகையை பிடித்தம் செய்து கணக்கில் சேர்த்து விடுவார்கள் என்று தான் உங்களுக்கு தெரியும். ஆனால் இந்த PF கணக்கில் ஏராளமான பலன்கள் உள்ளன. அவற்றைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
EPFO:
EPFO என்றால் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம். நம் நாட்டின் சிறந்த சமூக நிதி திட்டங்களில் இதே முக்கியத்துவம் வாய்ந்தது. பயனாளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் மற்றும் பண பரிவர்த்தனை களின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய சமூக பாதுகாப்பு நிறுவனம் இது.
இதில் யாரெல்லாம் பயனாளிகள்?
அமைப்புசார் துறை ஊழியர்களுக்கு சேமிப்பு மற்றும் சமூக பாதுகாப்பு சேவைகளை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் வழங்குகின்றது. EPF சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள நிறுவனங்கள் மட்டுமே இதில் பணம் செலுத்த முடியும். ஒவ்வொரு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் 12% தொகையை மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படுகிறது.
PF லாபம்:
உங்கள் கணக்கில் செலுத்தப்படும் பணத்துக்கு வட்டி வாயிலாக வருமானம் கிடைக்கின்றது. தற்போது PF கடைக்கு இருக்கு 8.1 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வருகின்றது.
வரி சலுகை:
PF கணக்கில் உள்ள சேமிப்புக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80C கீழ் வருமான வரி சலுகைகள் கிடைக்கின்றன.
அவசர தேவைக்கு பணம்
அவசர தேவைக்கு பணம் வேண்டுமென்றால் வேறு வழியே இல்லை என்றால் PF பணத்தில் ஒரு பகுதியை நாம் எடுத்துக்கொள்ளலாம்.
கடன்
PF பணத்தை கணக்கில் காட்டில் கடன் பெறலாம். இந்த கடன் அவசர தேவைக்காக இருந்தால் 1% வட்டி மட்டுமே விதிக்கப்படும். கடன் வழங்கி 36 மாதங்களுக்குள் கடனை திருப்பிச் செலுத்திவிட வேண்டும்.
இலவச இன்சூரன்ஸ்
பணிக்காலத்தில் ஊழியர் இறந்துவிட்டால் அவரை சார்ந்தவர்களுக்கு 7 லட்சம் ரூபாய் இலவச இன்சூரன்ஸ் கிடைக்கும்.
பென்சன்
PF கனக்குதாரர் 58 வயதுக்கு பிறகு பென்சன் பெற தகுதிபெற்றவர் ஆகிறார். ஆனால் இந்த பென்சன் பெறுவதற்கு 15 ஆண்டுகளுக்கு தொடர்ந்து மாதம் தோறும் PF செலுத்தியிருக்க வேண்டும் என்பது அவசியம்.