Categories
தேசிய செய்திகள்

PF பயனாளர்களுக்கு இந்த மாத இறுதிக்குள்…. தீபாவளி ஹேப்பி நியூஸ்….!!!!

2020-2021 ஆம் நிதி ஆண்டிற்கான பிஎப் வட்டி தொகை விரைவில் செலுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வரிசையாக வர இருப்பதால் இந்த செய்தி பிஎஃப் பயனாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் ஆறு கோடிக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் பிஎப் வட்டி தொகை நிறுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டுக்கு பிஎஃப் வட்டி விகிதம் 8.5% என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் பெரும்பாலானோர் பண நெருக்கடியில் சிக்கிக் கொண்டனர்.

அதுமட்டுமல்லாமல் பலரும் வேலை வாய்ப்புகளை இழந்தனர். பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டதால் ஏராளமானோர் பிஎஃப் பணத்தை எடுத்தனர். 2019-2020ஆம் நிதியாண்டு மார்ச் மாதம் முதல் பிஎஃப் வட்டி தொகை 8.5% ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இது கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்த வட்டி. தற்போது நடப்பு ஆண்டிற்கான பிஎஃப் வட்டி விரைவில் வழங்கப்பட உள்ளதாக வெளியாகியுள்ள செய்தி பயனாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PF பேலன்ஸ் பார்ப்பது எப்படி?

* EPFOHO UAN ENG என்ற வடிவில் UAN நம்பரை வைத்து 7738299899 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால் ஈசியாக பேலன்ஸ் தெரிந்துகொள்ளலாம்.

* இதுபோக UMANG ஆப் இன்ஸ்டால் செய்து அதன் மூலமாகவும் பேலன்ஸ் தெரிந்துகொள்ளலாம்.

Categories

Tech |