நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்கள் பெரும்பாலானோர் நிதி நெருக்கடியில் உள்ளனர். பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் சந்தாதாரர்கள் அனைவருக்கும் ஜூலை இறுதிக்குள் வட்டி தொகை செலுத்தப்படும் என்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது. பண நெருக்கடியில் உள்ள மக்களுக்கு இதன் மூலமாக நிவாரணம் கிடைக்கும். 2020 முதல் 2021 ஆம் ஆண்டுக்கான வட்டித் தொகை 8.5% அனைத்து சந்தாதாரர்களுக்கு ம் செலுத்தப்பட உள்ளது. இன்றுக்குள் அனைவருக்கும் பணம் வந்துவிடும். இதையடுத்து சந்தாதாரர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே மிக எளிமையாக PF பேலன்ஸ் பார்த்துக் கொள்ள முடியும்.
* epfindia.gov.in இணையதளத்தில் ஆன்லைனிலேயே PF பேலன்ஸ் பார்க்கலாம்.
* இதுபோக UMANG ஆப் இன்ஸ்டால் செய்து அதிலும் PF பேலன்ஸ் பார்க்கலாம்.
* மேலும் ‘EPFOHO UAN’ என்ற வடிவில் 7738299899 எண்ணுக்கு SMS அனுப்பியும் PF பேலன்ஸ் தெரிந்துகொள்ளலாம்.