Categories
தேசிய செய்திகள்

PF வாடிக்கையாளர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

அரசு, தனியார் ஊழியர்களுக்கு இந்தியாவில் அந்தந்த நிறுவனங்கள் சார்பாக பிஎஃப் கணக்கு தொடங்கப்பட்டு மாத சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட தொகையானது பிடித்தம் செய்யப்படுகிறது. இத்தொகையானது அவர்கள் பெறும் சம்பளத்தை பொறுத்து பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. பிஎஃப் தொகையானது நம் கண்ணுக்கு தெரியாத சேமிப்பு ஆகும். இந்த தொகை பணி காலம் நிறைவடைந்த பிறகு மொத்தமாக நமக்கு திரும்ப கிடைக்கும். EPFO அமைப்பு அவ்வவ்போது பிஎஃப் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் பிஎஃப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். பின் சம்பளம் பெறுபவர் நாமினியை நியமனம் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

தற்போது பிஎஃப் வட்டி விகிதம் 8.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் பிஎஃப் கணக்குதரர்களுக்கு கூடுதல் தொகை கிடைக்கும் நிலையில், EPFO தனது உறுப்பினர்களுக்கு புதிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. EPFO தனது கணக்குதாரர்களின் ஆதார் எண், பான் எண், UAN, வங்கி கணக்கு (அல்லது) OTP ஆகிய தனிப்பட்ட விவரங்களை தொலைபேசி அல்லது சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளுமாறு ஒரு போதும் கேட்பதில்லை என்று EPFO தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் EPFO கணக்கு விவரங்கள், ஆதார் எண் ஆகிய விபரங்களை பகிரும் போது தங்களின் பணத்தை இழக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளது. DigiLocker ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை சேமிப்பதற்கும், பகிர்வதற்கும், சரிபார்ப்பதற்கும் பாதுகாப்பான கிளவுட் அடிப்படையிலான தளம் ஆகும். இதன் மூலமாக EPFO உறுப்பினர்கள் தங்கள் ஆவணங்களை ஆன்லைனில் எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருப்பது என்பதை உறுப்பினர்கள் அறிந்திருக்க வேண்டும். DigiLocker-ல் கிடைக்கும் சில EPFO சேவைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது..

Categories

Tech |