Categories
தேசிய செய்திகள்

பிஎஃப் சந்தாதாரர்களே… உங்களுக்காக அறிமுகமாகும் புதிய வசதி… சூப்பர் அறிவிப்பு..!!

வேலையை விட்டு வெளியேறும்போது பிஎஃப் சந்தாதாரர்கள் அதை அப்டேட் செய்யும் வசதியை அரசு கொண்டு வந்துள்ளது.

ஒரு நிறுவனத்தில் நீங்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது பிஎஃப் தொகை பிடிக்கப்பட்டு இருந்து அந்த நிறுவனத்திலிருந்து நீங்கள் வெளியேறும்போது அந்த பிஎஃப் பணம் என்ன ஆகும்? சில நேரங்களில் பிஎஃப் பணம் மாட்டிக்கொள்ளும். இந்த பிரச்சனையில் இருந்து தீர்வு காணும் வகையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு புதிய வசதியை கொண்டுள்ளது.

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது வேலையை விட்டு நிற்கும் போது அது குறித்த விவரங்களை பிஎஃப் கணக்கில் அப்டேட் செய்து கொள்ளும் வகையில் இந்த நிறுவனம் ஒரு புதிய வசதியை கொண்டு வந்துள்ளது.

எப்படி செய்வது?

ஈபிஎஃப்ஓ அமைப்பின் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற இணையப் பக்கத்தில் செல்லவும். உங்களின்  பிஎஃப் நம்பர், பாஸ்வர்டு மற்றும் கேப்ட்சா குறியீட்டைப் பதிவிட்டு லாகின் செய்யவும். பின்னர் பிஎஃப் எண் ஆக்டிவாக இருக்கிறதா என்று உறுதிசெய்துகொள்ளவும். புதிதாக open  ஆகும் பக்கத்தில் ‘Manage’ என்ற டேபை கிளிக் செய்து, அதன் பின் mark exit ஆப்சனை கிளிக் செய்து ‘Select Employment’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

பழைய  எண்ணைத் தேர்ந்தெடுக்கும் போது உங்களது வேலை மற்றும் பிஎஃப் விவரங்களைப் உங்களால் பார்க்க முடியும். இதில் நீங்கள் வேலையை விட்டு விலகிய தேதி மற்றும் அதற்கான காரணத்தைப் பதிவிடவும். இதன் பின்னர் ’request OTP’ என்பதை கிளிக் செய்தால் உங்களது மொபைல் நம்பருக்கு ஓடிபி வரும். அதைப் பதிவிட்டு submit கொடுக்கவும்.

Categories

Tech |