பி.எஃப். ஐ அமைப்புக்கான தடை ஐந்தாண்டுகளுக்கு தொடரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் பி எஃப் ஐ மற்றும் அதன் துணை அமைப்புகள் சட்டவிரோத அமைப்பாக அறிவித்தது மத்திய அரசு.பாப்புலர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அதன் துணை அமைப்புகளை தடை செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் அண்மையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா இயக்கத்தினுடைய அலுவலகங்களிலும், அதனுடைய தலைவர்களின் வீடுகளிலும் NIA ( தேசிய பாதுகாப்பு முகமை ) மற்றும் பல்வேறு மாநில அரசுகள் சார்பில் சோதனைகள் நடத்தப்பட்டது.
பல்வேறு மாநிலங்களைச் தமிழ்நாடு, கேரளா, மத்திய பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா, டெல்லி, கர்நாடகா, உள்ளிட்ட பல்வேறு வடகிழக்கு மாநிலங்கள் என நாடு முழுவதும் சோதனைகள் நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கும் அதிகமான நபர்கள் கைது செய்யப்பட்டனர். நேற்றைய தினமும் இந்த சோதனை நடத்தப்பட்ட நிலையில், தற்பொழுது பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு ஐந்து ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அது மட்டுமல்லாமல் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சட்டவிரோத இயக்கம் என்றும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதனோடு தொடர்புடைய இயக்கங்களும் ஐந்தாண்டுகளுக்கு தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.