Categories
உலக செய்திகள்

மந்திரிசபை அடுத்தவாரம் அனுமதி வழங்கும்..! சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி… நியூசிலாந்து பிரதமர் நம்பிக்கை..!!

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா, பைசர் கொரோனா தடுப்பூசியை சிறுவர்களுக்கு செலுத்த மந்திரிசபை அடுத்த வாரம் அனுமதி வழங்கும் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

கொரோனா தொற்று இரண்டாவது அலையால் உலக நாடுகள் பெரும் இழப்புகளை சந்தித்துள்ள நிலையில் அனைத்து நாடுகளும் கொரோனா தடுப்பூசி போடுவதில் கவனம் செலுத்தி வருகின்றது. அந்த வகையில் அமெரிக்காவில் தயாரிக்கும் பைசர் கொரோனா தடுப்பூசியானது நியூசிலாந்து நாட்டில் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில் அந்நாட்டின் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் பைசர் கொரோனா தடுப்பூசியை 12 முதல் 15 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கும் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் பிரதமர் ஜெசிந்தா, மந்திரிசபையானது பைசர் கொரோனா தடுப்பூசியை சிறுவர்களுக்கு செலுத்த அடுத்த வாரம் தனது ஒப்புதலை வழங்கும் என நம்பிக்கை கூறியுள்ளார். மேலும் 5 மில்லியன் மக்கள்தொகை கொண்ட நியூசிலாந்தில் சுமார் ஒரு மில்லியன் பேருக்கு பைசர் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், மருத்துவ அதிகாரிகள் பைசர் பயோன்டேக் தவிர நியூசிலாந்தில் மற்ற தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |