இந்தியாவில் கொரோனா தொற்று பரவலுக்குப்பின் நடைபாண்டில் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருக்கிறது. மேலும் மாணவர்களுக்கு கொரோனா இடைவெளியால் ஏற்பட்ட கற்றல் குறைவை சரி செய்யும் விதமாக பல புதிய கல்வி முறைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது இதன் மூலமாக மாணவர்கள் எளிதில் பாடங்களை புரிந்து கொள்வதற்கு ஏதுவாக இருக்கும் என கூறப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தமிழக அரசு தற்காலிக பணி நியமன அடிப்படையில் ஆசிரியர்களை நியமித்து உத்தரவிட்டிருக்கின்றது. அந்த வகையில் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டி தேர்வுகளில் நடத்தி வருகின்றது.
அதில் அரசு பள்ளிகளில் காலியாக இருக்கின்ற 2, 207 முதல் நிலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் நிலை 1, கணினி பயிற்றுனர் நிலை 1, ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெற்றுள்ளது. மேலும் இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டும் முக்கிய அறிவிப்பு வெளியாக இருக்கிறது. அதாவது முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு வருகின்ற இரண்டாம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் இதற்கான அழைப்பு கடிதம் 48 மணி நேரத்திற்குள் முன் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றபடும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் தங்களின் அனைத்து சான்றிதழ்களுடன் சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு வரவேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து சான்றிதழ் சரிபார்ப்பின் போது போன் கைப்பை போன்றவைகளுக்கு அனுமதி கிடையாது என கூறப்பட்டிருக்கிறது இது பற்றி கூடுதல் விவரங்கள் மேலும் தெரிந்து கொள்ள http:// trb.tn.nic.in எனும் இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.