மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் காய்கறி விற்கும் பெண் ஒருவர் ஆங்கிலத்தில் சரளமாக பேசும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்தூர் நகரில் ரைசா அன்சாரி என்ற பெண் தள்ளு வண்டியில் காய்கறி விற்று வருகிறார். மாநகராட்சி அதிகாரிகள் தள்ளுவண்டியை அகற்றி வந்தபோது, அவர் ஆங்கிலத்தில் சரளமாக தேசி எதிர்ப்பு தெரிவித்தார். தனது குடும்பத்தினரின் பசியைப் போக்க தள்ளுவண்டியில் காய்கறி விற்பதாகவும் ஆனால் அதிகாரிகள் தன்னை போன்ற வியாபாரிகளை துன்புறுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். பி.ஹெச்டி முடித்து இருப்பதாகவும் , கொரோனா பரவலுக்கு இஸ்லாமியர்கள் காரணம் என்னும் கருத்தை பரவியதால் கல்லூரிகள் மற்றும் ஆய்வு நிறுவனங்கள் தனக்கு பணி வழங்கவில்லை என ரைசா அன்சாரி தெரிவித்தார்.