Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

டெல்லியில் இருந்து போன் வந்துச்சு…. அதனால தான் சென்றேன்…. குஷ்பு பரபரப்பு பேட்டி …!!

பாஜகவில் இணைந்த குஷ்பு தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் மீது சரமாரியான குற்றசாட்டுக்களை முனாவைத்தார்.

நேற்றிலிருந்து நான் ஆறு வருடமாக காங்கிரஸ்  கட்சிக்கு பாடுபட்டேன். இப்போது காங்கிரஸ் கட்சிக்காரங்க ரெண்டு ரூபா கொடுத்துட்டு வேலையை ஆரம்பித்து விட்டார்கள். இருளில் இருப்பவர்கள், முகம் தெரியாதவர்கள், உண்மையாக பெயர் இருக்காது, முகம் இருக்காது,  அவர்களுக்கு சம்பளம் கொடுத்துவிட்டு மீம்ஸ் போடுகின்றார்கள். இரண்டு ரூபாய் கொடுத்து மீம்ஸ் போட்டச் சொல்லும் வேலையை எல்லா கட்சியுமே செய்கின்றது. அங்கே இருக்கும் போது விசுவாசமாக இருந்தேன்.

கடந்த சில நாட்களாக நான் எந்த ஒரு மேடையிலும் பேசி பார்த்து இருக்கிறீர்களா ? என்னை எந்த கூட்டத்திற்கும் கூப்பிடுவதில்லை. பேப்பர்ல பார்த்து தான் நான் தெரிஞ்சுப்பேன். இவ்வளவு நாள் கழிச்சு 5ஆம் தேதி ஒரு கூட்டத்தில் நான் கலந்துகொண்டேன். அதற்கு காரணம் டெல்லியில் இருந்து எனக்கு போன் கால் வந்தது. இங்க இருந்து போன் கால் வந்தா நான் போக மாட்டேன்னு தெரியும். டெல்லியில் இருந்து போன் கால் மூலமாக நான் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று சொன்னாங்க. என்னுடைய விசுவாசத்தை நான் காட்டிவிட்டு தான் வெளியே வந்தேன்.

என்னை கூட்டத்திற்கு கூப்பிடும்போது ஷூட்டிங்ல இருந்ததாகச் சொல்கிறார்கள். எந்த சூட்டிங்கில் இருந்தேன் ?  நான் சூட்டிங்கிலிருந்ததை யாராவது சொல்லுங்க ? தமிழகத்தில் இருக்கின்ற காங்கிரஸ் தலைவர் வந்து அவர்களுடைய தவறுகளை மறைப்பதற்காக  என் மேல பழி போடுகின்றார்கள். எல்லாமே மக்களுக்கு தெரியும். அண்ணாத்த சூட்டிங் போன வருஷம் இருந்தது. அதுவும் 20 நாள் தான் இருந்தது. அஞ்சு, அஞ்சு நாளாக மாதத்துக்கு பிரித்து கலந்து கொண்டேன்.

எனக்கு சோறு போட்ட தொழிலுக்கு அஞ்சு நாள் கொடுத்துவிட்டு, மீதி 25 நாள் கட்சிக்காக உழைத்தேன். அந்த இருபத்தைந்து நாள் காங்கிரஸ்காரர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்களா ? அந்த இருபத்தைந்து நாளில் எங்கேயுமே ஒரு கட்சிக்கு ஒரு மீட்டிங் நடத்தல என்று குஷ்பு சரமாரியாக காங்கிரஸ் மீது சாடினார்.

Categories

Tech |