பிரிட்டனில் உள்ள ஒரு வீட்டில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனில் பெரோ என்ற கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிலிருந்து ஆம்புலன்சுக்கு போன் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மருத்துவ ஊழியர்கள் தகவல் வந்த வீட்டிற்கு சென்றனர். அந்த வீட்டிற்குள் ஒரு நபர் படுகாயங்களுடன் கிடந்துள்ளார். அதன்பின் அவரை பரிசோதனை செய்ததில் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரியவந்தது.
பின்பு இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்த நபரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இச்சம்பவம் குறித்த எந்த விவரங்களும் இன்னும் தெரியவரவில்லை.
ஆகையால் சம்மந்தபட்ட வீட்டிற்கு அருகில் இருப்பவர்கள் எவரேனும் இது பற்றிய தகவல்களை அறிந்திருந்தால் அதனை முன் வந்து கூறும்படி அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர்.மேலும் இது தொடர்பாக ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.