Categories
உலக செய்திகள்

ஆப்கனை ஒதுக்கி விடக் கூடாது…. தொலைபேசியில் வலியுறுத்திய பிரதமர்…. வெளியான முக்கிய தகவல்….!!

தலிபான்களின் பிடியில் சிக்கியுள்ள ஆப்கானிஸ்தான் நாட்டை பொருளாதார ரீதியான சிக்கலிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று ரஷ்ய அதிபருடன் தொலைபேசியில் கலந்துரையாடிய பாகிஸ்தானின் பிரதமர் அவரிடம் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான்கள் அங்கு தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் மனிதாபிமானத்தின் அடிப்படையில் ஆப்கானிஸ்தான் நாட்டை பொருளாதார ரீதியான சிக்கலிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்றும், அனைத்து நாடுகளும் ஆப்கானிஸ்தான் நாட்டை ஒதுக்காமல் அதனை உயர்த்தி விட வேண்டும் என்றும் பாகிஸ்தானின் பிரதமர் ரஷ்ய அதிபருடன் தொலைபேசியில் பேசும்போது வலியுறுத்தியுள்ளார்.

மேலும் ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள பொது மக்களின் பாதுகாப்பை முன்வைத்தும் பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான்கான் ரஷ்ய நாட்டின் அதிபருடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். இந்த தகவலை பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் மாளிகை செய்தி குறிப்பாக வெளியிட்டுள்ளது.

Categories

Tech |