Categories
மாநில செய்திகள்

“யப்பப்பா”…. 2 நாளா போன தரையில் கூட வைக்க முடில…. ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து தள்றாங்க… சிலிர்த்துப் போன CM….!!!!!

தமிழகத்தில் மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில் பெருமளவு பாதிப்புகள் எதுவும் இல்லை என்று சொல்லப்படுகிறது. இதற்கு காரணம் புயலின் முன்பாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தான் என்று முதல்வர் ஸ்டாலினை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள். அதன் பிறகு முதல்வர் ஸ்டாலின் தென்காசி மற்றும் மதுரை போன்ற மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு விட்டு, இரவு நேரத்தில் கண்ட்ரோல் ரூமுக்கு சென்று புயல் குறித்த பாதிப்புகளை கேட்டறிந்தார். இந்நிலையில் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் வைத்த நடைபெற்ற திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார்.

அவர் பேசியதாவது, புதிதாக திருமணமான ஜோடிகளாகிய நீங்கள் குழந்தைகளுக்கு அழகிய தமிழ் பெயர்களை வைக்க வேண்டும். திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் முதலில் கொரோனா  பாதிப்பில் இருந்து மீண்டு வந்தோம். அந்த சமயத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக முதல்வர் உட்பட அனைத்து அமைச்சர்களும் மாறி கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதால் கொரோனா தாக்கத்திலிருந்து தப்பிக்க முடிந்தது. தற்போது புயல் மற்றும் மழை போன்ற பெரிய பாதிப்புகளில் இருந்து நாம் வெற்றிகரமாக மீண்டு வந்துள்ளோம். ஒரு பெரிய புயலையே சந்திக்கிற திறமை திராவிட மாடல் ஆட்சிக்கு இருக்கிறது என்பதை நிரூபித்து விட்டோம்.

மாண்டஸ் புயலால் பெரிய அளவில் சேதங்கள் இல்லை என பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள். என்னால் 2 நாட்களாக போனை தரையில் கூட வைக்க முடியவில்லை. என்னை அனைவரும் நம்பர் ஒன் முதலமைச்சர் என்று பாராட்டுகிறார்கள். இதில் நான் எவ்வித பெருமையும் கொள்ளவில்லை. மேலும் தமிழகம் என்றைக்கு முதல் மாநிலமாக வருகிறதோ  அன்றைக்கு தான்‌ பெருமை. இதை நான் கண்டிப்பாக நிறைவேற்றுவேன். ஏனெனில் நான் சாதாரண ஸ்டாலின் கிடையாது. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். எனவே நிச்சயம் அதை செய்வேன் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |