இந்தியாவில் இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியால் பண பரிமாற்றத்திற்காக வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியமே கிடையாது. அனைவரது கையிலும் ஸ்மார்ட் போன் இருப்பதால் அதிலுள்ள பண பரிமாற்ற செயலிகள் மூலமாக இருந்த இடத்தில் இருந்து கொண்டே மற்றவருக்கு எளிதாக பணத்தை மாற்றலாம். தற்போது பல பணம் பரிமாற்ற செயலிகள் மக்களுக்கு உதவும் விதமாக நடைமுறையில் உள்ளன. அதிலும் குறிப்பாக போன் பே, கூகுள் பே மற்றும் பேடிஎம் போன்றவைகளை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
இந்த செயலிகள் மூலமாக க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்து யுபிஐ என்னை உள்ளிட்டு உடனடியாக பணத்தை மாற்றி விடலாம். ஆனால் சில சமயங்களில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பணத்தை சரியாக அனுப்ப முடியாத நிலை ஏற்படும். இல்லையென்றால் தவறுதலாக பணம் வேறு நபர்களுக்கு சென்று விடும். இப்படி நடந்தால் கவலைப்பட வேண்டாம். தற்போது பிரிவு எட்டின் கீழ் ஆன்லைன் பண பரிமாற்ற செயலிகள் மூலமாக இழந்த பணத்தை மீட்டெடுக்க அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதனால் பணத்தை இழந்தவர்கள் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளித்தால் உடனே உங்கள் பணம் உங்களுக்கு வந்து சேரும்.