தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். மளிகைக்கடை முதல் உணவகங்கள் வரை எங்கு சென்றாலும் ஆன்லைன் பரிவர்த்தனைகளை தான். யுபிஐ மூலம் செயல்படும் இதனை நாம் போன் பே, கூகுள் பெயர் மற்றும் பேடிஎம் போன்ற செயலிகள் மூலம் பயன்படுத்தி வருகின்றோம். பணம் செலுத்துவது மட்டுமல்லாமல் மொபைல் மற்றும் மின்சாரம் போன்ற கட்டணங்களை செலுத்துவதற்கும் இதனைப் பயன்படுத்துகிறோம்.
இந்த நிலையில் 50 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்தால் இனி கட்டணம் வசூலிக்கப்படும் என்று போன்பே நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே கிரெடிட் கார்டு மூலம் செலுத்தப்படும் ரீசார்ஜ் கட்டணங்களுக்கு பிராசஸிங் பீஸ் எனப்படும் செயலாக்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது 50 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று போன் நிறுவனம் அறிவித்துள்ளது
வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது. 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையிலான மொபைல் ரீசார்ஜ்களுக்கு ஒரு ரூபாயும், 100க்கு மேல் இரண்டு ரூபாயும் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் ஒரு ஆப்பில் இருந்து மற்றொரு ஆப்பிற்கு மாற முடிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.