Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இங்க எப்படி போகணும்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. மடக்கி பிடித்த போலீஸ்….!!

செல்போன் பறித்து சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வடகரை பகுதியில் ஆஷிக் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் வாசலில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருக்கும் போது அவ்வழியாக வந்த இரண்டு நபர்கள் ஆஷிகிடம் காரைக்குடிக்கு எப்படி செல்வது என கேட்பது போல் செல்போனை பறித்து சென்றுள்ளனர்.

அப்போது அவ்வழியாக சென்ற காவல்துறையினர் சந்தேகமடைந்து இரண்டு பேரையும் மடக்கிப்பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் தீனதயாளன் மற்றும் அஜய்குமார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்போன் திருடிய குற்றத்திற்காக 2 பேரையும் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |