Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மாணவியின் ஆபாச புகைப்படம்…. முகநூலில் பதிவிட்ட காதலன்…. போலீஸ் நடவடிக்கை…!!

மாணவியின் புகைப்படத்தை காதலன் முகநூலில் பதிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டைபாறை பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சதீஷ் தன்னுடன் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியை காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து சதீஷின் செல்போனுக்கு அந்த மாணவி அவருடைய ஆபாச படங்களை அனுப்பி உள்ளார். தற்போது காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சதீஷ் மாணவியின் ஆபாச புகைப்படங்களை தனது நண்பர்களுக்கு அனுப்பி உள்ளார்.

அதன் பிறகு நண்பர்களுடன் இணைந்து சதீஷ் அந்த புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சதீஷ் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |