Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அஜித் வெளியிட்டுள்ள புகைப்படம்…. இணையத்தில் வைரல்…!!

நடிகர் அஜித் தான் துப்பாக்கி சுடும் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக திகழும் அஜித் குமார் தற்போது வலிமை படத்தில் நடித்துக் கொண்டுள்ளார். அப்படத்தின் 20 சதவீத படப்பிடிப்பு மட்டுமே இன்னும் பாக்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் முதல் போஸ்டரை விரைவில் வெளியிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

அதற்கு பதிலளித்த வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் படத்தின் முதல் தோற்ற போஸ்டர் பணிகள் நடந்து வருவதால் கூடிய விரைவில் வெளியிடப்படும் என்று தனது வலைதளப் பக்கத்தில் பதிவிட்டார். இதனால் அஜீத் ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்துக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அஜித் சில நாட்களாக தன் ரசிகர்களை சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இதைத் தொடர்ந்து அவர் சென்னை ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படத்தையும் அவர் இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது மிகவும் வைரலாக பரவி வருகிறது.

 

 

Categories

Tech |