புயலால் வேரோடு சாய்ந்த மரங்களுக்கிடையில் பிரபல நடிகை எடுத்திருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் கண்டித்துள்ளனர்.
குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கோரத்தாண்டவம் ஆடிய டவ் தே புயல் அப்பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புயலில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தக் கோர புயலால் வேரோடு சாய்ந்த மரங்களுக்கு இடையில் பிரபல நடிகை ஒருவர் புகைப்படம் எடுத்திருப்பதை ரசிகர்கள் பலரும் கண்டித்துள்ளனர்.
ஹிந்தி நடிகை தீபிகா சிங் எடுத்துள்ள இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் புயலை நாம் தடுத்து நிறுத்த முடியாது அதுவாகவே கடந்து போகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.