மெட்டி ஒலி சீரியல் பிரபலங்கள் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.
தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும் தற்போதைய சீரியல்களை காட்டிலும் பழைய சீரியல்கள் பலரது மனங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளது. ஏனென்றால் அந்த சீரியல்களின் கதைக்களம் அந்த அளவுக்கு அற்புதமாகவும், உணர்வுபூர்வமாகவும் இருக்கும்.
அப்படி ரசிகர்களால் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற சீரியலில் ஒன்று மெட்டிஒலி. இந்த சீரியலில் நடித்த பலரும் தற்போதும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த சீரியலின் போது அவர்கள் அனைவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.