விழுப்புரம் மாவட்டத்தில் செம்மனூர் ஊராட்சி பகுதியில் தமிழக அரசினுடைய சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக புகைப்படக் கண்காட்சி நடைபெற்றுள்ளது. இந்த கண்காட்சி செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நடத்தப்பட்டுள்ளது.
மேலும் இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் நடைமுறைக்கு வந்த திட்டங்களான அரிசி பெரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி உதவி ரூ.4000 வழங்கும் திட்டம், நகர பேருந்துகளில் பெண்கள் இலவச பயண திட்டம், ஆவின் பால் லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்தல், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம், இல்லம் தேடி கல்வித் திட்டம் ஆகியவற்றின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.
அது மட்டுமில்லாமல் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம், மக்களை தேடி மருத்துவம், இருளர் பழங்குடியினர் மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள், இலங்கைத் தமிழருக்கான நலத்திட்டங்கள் உள்ளிட்டவைகளின் புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கண்காட்சியை செம்மார் ஊராட்சி சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு சென்றுள்ளனர்.