Categories
உலக செய்திகள்

உக்ரைனில் நடக்கும் கொடூரங்கள்…. நிர்வாணமாக சடலங்கள்…வெளியான அதிர்ச்சி புகைப்படங்கள்…!!!

உக்ரைன் நாட்டில், ரஷ்ய படைகள் மேற்கொண்ட கொடூரமான நிகழ்வுகளை வெளிப்படுத்தும் வகையில் சில புகைப்படங்கள் வெளியாகியிருக்கிறது.

ரஷ்யப் படைகள் உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்து சுமார் 43 நாட்களாக தொடர்ந்து போர் கொடுத்து வருகிறார்கள். இதில் மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டு வருகிறார்கள். போர்  தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினரான லிசியா வலிலெங்கோ புகைப்படங்கள் சிலவற்றை தற்போது வெளியிட்டிருக்கிறார்.

Image

அதில், உக்ரைன் நாட்டின் தலைநகரில் இருக்கும் புறநகர் பகுதிகளில் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களின் உடல்களை நிர்வாணமாக பையில் போட்டு எடுத்துச் சென்ற புகைப்படம் வெளியாகியிருக்கிறது. மேலும் இரண்டாவது புகைப்படத்தில் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நபர்களின் குடும்பத்தினரும் உறவினர்களும் கதறி அழுவது தெரிகிறது.

Categories

Tech |