பாஜக கை காட்டுபவர் தான் தமிழகத்தின் முதலமைச்சராக முடியுமென பாஜக விவசாய அணி தலைவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் விவசாய நலத்திட்டங்களால் ஆளும் கட்சியினர் மட்டுமே பயன் பெறுகின்றனர் என்றும் அந்த திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக பாஜக விவசாய அணி தலைவர் திரு. ஜி.கே. நாகராஜ் வலியுறுத்தியுள்ளார். சென்னை தி நகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் தேர்தலில் பாஜக கைகாட்டுபவர்தான் தமிழக முதலமைச்சர் ஆவார் எனக் கூறியுள்ளார்.