மாற்றுத்திறனாளிகள் சுற்றுலா தளங்களுக்கு எளிதாக செல்லும் வகையில் வசதிகள் அமைத்துக் கொடுக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கே.ஆர். ராஜா என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களுக்கும் குறிப்பாக குற்றால அருவிகள் போன்ற அருவிகளுக்கும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக செல்லும் வகையில் தமிழக அரசு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வந்தது. அப்போது தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களுக்கும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக செல்லும் வகையில் அனைத்து விதமான வசதிகளையும் அமைத்து கொடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். அதன் பிறகு கேரள மாநிலத்தில் அனைத்து சுற்றுலா தளங்களுக்கும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக செல்லும் வகையில் வசதிகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக செல்லும் வகையில் வசதிகள் அமைத்து கொடுக்க வேண்டும் என நீதிபதி கூறினார். மேலும் சுற்றுலா செல்லும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக கையாளும் வகையில் சுற்றுலா வழிகாட்டி புத்தகத்தையும் வெளியிட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.