Categories
சினிமா தமிழ் சினிமா

பிகில் வசூல் சாதனை… சவால் விட்ட திரையரங்கம்….. !!

பிகில் படத்தின் வசூல் குறித்து திரையரங்கம் சவால் விட்டது சினிமா துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய் அட்லி கூட்டணியில் மூன்றாவது படமாக தீபாவளியை முன்னிட்டு கடந்த மாதம் அக்டோபர் 25ஆம் தேதி வெளியான படம் பிகில். இப்படம் வெளியாகி அன்றைய தினத்திலிருந்து கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. வழக்கமாக விஜய் படத்தின் வசூல் விவரங்கள் என்பது தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்லாது அவரது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கும் காரணம். விஜயின் படங்கள் சமீப காலமாகவே தமிழ் சினிமாவின் முந்தைய சாதனைகளை முறியடித்து வருகின்றன.

எனவே அந்த வரிசையில் பிகில் படமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து பிகில் படம் 200 கோடி வசூலித்ததாக சொல்லப்பட்டது. இந்த பதிவு விமர்சனங்களையும் எழுப்பியது. இதனைத் தொடர்ந்து வார இறுதி நாட்களை தவிர மற்ற நாட்களில் பிகில் படத்தின் டிக்கெட் சரியாக விற்பனை ஆகாததால் டிக்கெட் புக் செய்தவர்களை வேறு திரையரங்கத்திற்கு மாற்றினோம் என்று சென்னை தேவி தியேட்டர் நிர்வாகம் வெளியிட்ட தகவலும் அடுத்தகட்ட பரபரப்பை பற்ற வைத்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் நெல்லையில் அமைந்துள்ள பிரபல திரையரங்கம் ஒன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவலை பதிவிட்டது. அதில் நெல்லையில் 2019ஆம் ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூல் சாதனை செய்த படம் பிகில் என்று குறிப்பிட்டு இருந்தது. இந்த டுவிட்டை விமர்சனம் செய்யும் வகையில் நெல்லையில் அமைந்துள்ள மற்றொரு திரையரங்கம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு படம் வசூல் செய்துள்ளது , வசூலில் எந்த தியேட்டர் முன்னிலை வகிக்கிறது என்பது உள்ளிட்ட விவரங்கள் படத்தின் விநியோகஸ்தர் மட்டுமே தெரியும் என்றும்,  ஆகவே திரையரங்குகளில் இருந்து வரும் பொய்யான செய்திகளை நம்பவேண்டாம் என்றும் கூறியுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள பிகில் வசூல் குறித்து பதிவிட்ட அந்த திரையரங்கம் விநியோகஸ்தர் கடந்த மாதம் அசுரன் படம் வெளியானது. அந்த படத்திற்கு நீங்கள்தான் விநியோகஸ்தர். உங்களுக்கே தெரியும் நெல்லையில் அசுரன் படம் எங்கள் திரையரங்கில் அதிகம் வசூல் செய்தது என்று. பிகில் விஷயத்தில் படம் தொடர்பான அறிவிப்பை வெளியிடும் முன்பே நெல்லையில் 4 திரையரங்குகளில் பிகில் திரைப் படத்திற்கான முன்பதிவு தொடங்கப்பட்டு பிகில் காட்சிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டது.

ஆனால் நாங்கள் ரசிகர்களுக்கான எந்த சிறப்பு காட்சியையும் திரையிட வில்லை.இதற்கும் கடைசி நேரத்தில் தான் நாங்கள் டிக்கெட் புக்கிங் தொடங்கினோம் இருந்தாலும் கிட்டத்தட்ட 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன என பதில் அளித்தது மட்டுமல்லாமல் நாங்கள் எங்கள் திரையரங்கில் பிகில் வசூல் செய்த விவரங்களை தாக்கல் செய்ய தயார் என்றும், இந்த சவாலுக்கு நீங்கள் தயாரா ? என்று சவால் விடுத்துள்ளது.

மேலும் திகில் படத்தின் விநியோகஸ்தரா நீங்கள் எப்படி நாங்கள் பொய் சொல்கிறோம் என்று கூறுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளது. இது மட்டுமல்லாது திறமை தகுதி உள்ளவர்கள் உயர வருவார்கள் என்றும் உங்கள் பதிலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்றும் கூறியுள்ளது. இது திரைத்துறை வட்டாரத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

Categories

Tech |