இங்கிலாந்தின் முன்னாள் சுகாதார செயலாளரும், அவரது உதவியாளரும் சுவிட்சர்லாந்திலுள்ள விடுதி ஒன்றில் சேர்ந்து தங்கிவிட்டு இரவு உணவிற்காக வெளியே செல்வது தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தின் முன்னாள் சுகாதார செயலாளராக matt hancock என்பவர் இருந்துள்ளார். அவர் தனது உதவியாளருடன் முத்தமிடுவது தொடர்பான புகைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியதால் அவரை சுகாதார செயலாளர் பொறுப்பிலிருந்து அந்நாட்டு அரசாங்கம் நீக்கியுள்ளது.
அதன்பின்பு தலைமறைவான இருவரும் தற்போது ஒன்றாக சேர்ந்து காரிலேயே சுவிட்சர்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார்கள். இதனையடுத்து சுவிட்சர்லாந்திலுள்ள விடுதி ஒன்றில் ஒன்றாக தங்கியிருந்த இங்கிலாந்தின் முன்னாள் சுகாதார செயலாளரும், அவரது உதவியாளரும் தங்களது நண்பர்களுடன் இரவு உணவிற்காக வெளியே சென்றுள்ளார்கள். இதுதொடர்பான புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.